Skip to main content
SpaceX
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

SpaceX - உலகின் 5ஆவது பெரிய நிறுவனம்

வாசிப்புநேரம் -
SpaceX - உலகின் 5ஆவது பெரிய நிறுவனம்

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்கப் பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க்கின் (Elon Musk) SpaceX நிறுவனம் உலகில் ஆக மதிப்புமிக்க நிறுவனங்கள் பட்டியலில், Amazon-ஐப் பின்னுக்குத் தள்ளி 5ஆம் நிலையை அடைந்துள்ளது.

IPO எனும் பொதுமக்களுக்கான முதல் பங்கு விற்பனைக்குப் பிறகு SpaceX நிறுவனத்தின் பங்கு மதிப்பு 50 விழுக்காடு கூடியது.

நிறுவனம் தற்போது 2.78 டிரில்லியன் டாலர் மதிப்பு கொண்டுள்ளது.

Amazon நிறுவனத்தின் மதிப்பு 2.66 டிரில்லியன் டாலர்.

IPO தொடங்கியபோது SpaceX பங்கின் அறிமுகவிலை 135 டாலர். தற்போது அதன் விலை 209 டாலர்.

அதன் நிறுவனரான இலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனரானார்.

செயற்கை நுண்ணறிவு தரவு நிலையங்களை விண்வெளிக்கு அனுப்புவது, செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி அங்கு ஒரு சமூகம் அமைப்பது போன்ற யோசனைகளை SpaceX முன்வைத்திருக்கிறது.

அது முதலீட்டாளர்களிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆதாரம் : Reuters

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்