Skip to main content
GTA VI காணொளிகளி விளையாட்டு : கசியவிட்ட இளையருக்கு 7 ஆண்டுச் சிறை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

GTA VI காணொளிகளி விளையாட்டு : கசியவிட்ட இளையருக்கு 7 ஆண்டுச் சிறை

வாசிப்புநேரம் -
GTA VI காணொளிகளி விளையாட்டு : கசியவிட்ட இளையருக்கு 7 ஆண்டுச் சிறை

(படம்: AP Photo/Yuki Iwamura)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 24 Nov 2026 07:08PM புதுப்பிப்பு : 24 Nov 2026 07:26PM

பிரபல GTA VI காணொளி விளையாட்டை அதன் வெளியீட்டுக்கு முன்பே இணையத்தில் கசியவிட்ட இளையருக்கு ஏழு ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

21 வயது பிரிட்டிஷ் இளையர் அரியன் குர்டாஜ் (Arion Kurtaj) ஏற்கனவே பல்லாண்டாய் சிறையில் இருக்கிறார். 

எனவே அவர் உடனடியாக விடுவிக்கப்படலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

குர்டாஜ் தொடர்புத் திறன் குறைபாடுள்ளவர் என்பது தீர்ப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது. 

குர்டாஜ், Lapsus$ எனும் ஊடுருவல் குழுவைச் சேர்ந்தார். 

2021ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை Rockstar Games, Uber, Revolut உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் கணினிக் கட்டமைப்புகளை ஊடுருவியதை அவர் ஒப்புக்கொண்டார். 

2022ஆம் ஆண்டு அவர் ஒரு ஹோட்டலில் தங்கினார். 

கைத்தொலைப்பேசி உள்ளிட்ட பல கருவிகளைப் பயன்படுத்தி Rockstar நிறுவனத்தின் கட்டமைப்பை ஊடுருவினார்.

அதன்வழி GTA VI விளையாட்டின் 90 காணொளிகளைத் திருடி இணையத்தில் கசியவிட்டார்.

இதனால் GTA VI விளையாட்டின் வெளியீட்டுத் திட்டம் பாதிக்கப்பட்டது.

ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்