மீண்டும் மீண்டும் துன்புறுத்தும் மாணவர்களுக்குப் பிரம்படி விதிக்கப்படலாம்: கல்வி அமைச்சர்
வாசிப்புநேரம் -
துன்புறுத்தல் குற்றங்களை (Bullying offences) மீண்டும் மீண்டும் புரியும் மாணவர்களுக்குத் தண்டனையாகப் பிரம்படி விதிக்கப்படலாம் என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) கூறியிருக்கிறார்.
துன்புறுத்தல் குற்றங்களின் தன்மையைப் பொறுத்து தண்டனை விதிக்கப்படும் என்றார் அமைச்சர் லீ.
மற்ற நடவடிக்கைகள் போதுமானவையாக இல்லை என்று கருதும்போது பள்ளிகள் பிரம்படி விதிப்பதைக் கருத்தில் கொள்ளலாம்; அதே சமயம் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றார் திரு லீ.
எல்லாப் பள்ளிகளுக்கும் பொதுவான நடைமுறையாக அது இருக்கும். கடுமையான சம்பவங்களில் மட்டுமே பிரம்படி விதிப்பது குறித்துப் பரிசீலிக்கப்படும். வழிகாட்டிகள் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும்.
செய்த தவற்றைப் பற்றி யோசித்துப் பார்க்க மாணவர்களுக்கு நேரம் ஒதுக்குவது,
பள்ளியில் இருந்து தற்காலிகமாக நீக்குவது போன்ற மற்ற வகையிலும் துன்புறுத்தல் குற்றங்கள் கையாளப்படும் என்று அமைச்சர் லீ சொன்னார்.
பிரம்படி விதிக்கப் பள்ளி முதல்வர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.
குறிப்பிட்ட சில ஆசிரியர்களுக்கு மட்டுமே அதனைச் செயற்படுத்த அதிகாரம் இருக்கும்.
மாணவர்களின் வயதும் முதிர்ச்சியும் கவனத்தில் கொள்ளப்படும்.
அவர்கள் தவற்றை உணர்ந்து அதிலிருந்து கற்றுக்கொள்வார்களா என்பதும் பார்க்கப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi