Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசியை எடுத்தால் கூட தண்டிக்கப்படலாம்

வாசிப்புநேரம் -
வாகனம் ஓட்டும்போது கைத்தொலைபேசியை எடுத்தால் கூட தண்டிக்கப்படலாம்

கோப்புப் படம்: AP/Robert F Bukaty

வெளியீடு : 07 Jul 2026 01:32PM புதுப்பிப்பு : 07 Jul 2026 04:53PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வாகனத்தைச் செலுத்தும்போது கைத்தொலைபேசியை எடுத்தால் கூட ஓட்டுநர்கள் இனி தண்டிக்கப்படலாம்.

ஓட்டுநர்கள் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தாமல் கையில் பிடித்திருந்தால் கூட அது பொருந்தும்.

அதைப் பரிந்துரைக்கும் சாலைப் போக்குவரத்து சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

ஓட்டுநர்கள் அவ்வாறு செய்வதைக் காட்டும் புகைப்படத்தையோ காணொளியையோ எடுக்க போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டம் அனுமதி வழங்கும்.

பொதுவாகக் கைத்தொலைபேசியைப் பயன்படுத்தும் நோக்கத்தோடுதான் ஓட்டுநர்கள் அதைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பார்கள் என்று உள்துறை அமைச்சு குறிப்பிட்டது.

வாகனம் ஓட்டுவதற்கு முன்னரோ ஓட்டியதற்குப் பின்னரோ கைத்தொலைபேசியைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்றும் அமைச்சு விளக்கியது.

வாகனத்தை ஓட்டும்போது கைத்தொலைபேசியைப் பயன்படுத்த எந்தவொரு நல்ல காரணமும் கிடையாது என்றும் அமைச்சு வலியுறுத்தியது.

கைத்தொலைபேசி, கையடக்கச் சாதனங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

வாகனம் ஓட்டும்போது மின்னிலக்கக் கைக்கடிகாரத்தைத் தொடுவது குற்றமாகாது என்று உள்துறை அமைச்சு தெளிவுபடுத்தியது.

கைக்கடிகாரம் மணிக்கட்டில் இருக்கவேண்டும்; அதைக் கழற்றி கையில் வைத்துக்கொள்ளக் கூடாது என்று அது கூறியது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்