Skip to main content
இந்தியாவில் 32 பில்லியன் வெள்ளி இணைய விளையாட்டுக்குத் தடை?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

இந்தியாவில் 32 பில்லியன் வெள்ளி இணைய விளையாட்டுக்குத் தடை? - பதறும் நிபுணர்கள்

வாசிப்புநேரம் -
இந்தியாவில் 32 பில்லியன் வெள்ளி இணைய விளையாட்டுக்குத் தடை? - பதறும் நிபுணர்கள்

(கோப்புப் படம்: REUTERS/Dado Ruvic/Illustration)

இந்தியாவில் பணம் புரளும் இணைய விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்ற செய்தி அந்தத் துறையைச் சார்ந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணைய விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்கள் தடை அமலுக்கு வந்தால் பலன்களைவிடப் பாதகங்களே அதிகம் என்று சொல்கின்றனர்.

பலர் வேலையை இழக்கக்கூடும் என்றும் வரி வருவாய் குறையும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சட்ட விரோதமான சூதாட்டத்திற்கு வழி வகுக்கும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

துறையில் புத்தாக்கம் குறையும் என்றும் இணையவெளியைப் பொறுத்தவரை உலகளவில் இந்தியாவின் நிலை சரியும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த மசோதாவிற்கு எதிராக All India Gaming Federation என்ற அமைப்பு உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்குக் கடிதம் தீட்டியிருக்கிறது.

தடையைவிடப் படிப்படியான நெறிமுறைகளே சிறந்தது என்று கடிதத்தில் குறிப்பிட்டதாக India Today கூறுகிறது.

இணைய விளையாட்டுத் துறையின் தற்போதைய நிலை...

மதிப்பு: சுமார் 25 பில்லியன் டாலர் (சுமார் 32 பில்லியன் வெள்ளி)
வருவாய்: சுமார் 3.5 பில்லியன் டாலர் (சுமார் 4.5 பில்லியன் வெள்ளி)
வேலை வாய்ப்புகள்: 100,000

முழுத்தடை நடைமுறைக்கு வந்தால் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.
ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்