Skip to main content
அமெரிக்கா: செனட் சபையும் மக்களவையும் ஜனநாயகக் கட்சியின் வசம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்கா: செனட் சபையும் மக்களவையும் ஜனநாயகக் கட்சியின் வசம்

வாசிப்புநேரம் -
அமெரிக்கா: செனட் சபையும் மக்களவையும் ஜனநாயகக் கட்சியின் வசம்

(படம்: AFP/Eric Baradat)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Nov 2026 12:47PM புதுப்பிப்பு : 04 Nov 2026 03:06PM

அமெரிக்காவின் செனட் சபையையும் மக்களவையையும் ஜனநாயகக் கட்சி வசப்படுத்தியுள்ளது.

பல்லாண்டுகளாய் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த மாநிலங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

டெக்சஸ் (Texas), கன்சஸ் (Kansas), ஒஹாயோ (Ohio), சௌத் கரோலைனா (South Carolina), அயோவா (Iowa)  உள்ளிட்ட மாநிலங்கள் அவற்றுள் அடங்கும்.

கன்சஸ் குறிப்பாக 100 ஆண்டுகளில் முதல்முறையாக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை செனட் சபைக்குத் தேர்ந்தெடுத்திருப்பதாக BBC ஊடகம் சொன்னது.

டெக்சஸ், சௌத் கரோலைனா ஆகியவை சுமார் 30 ஆண்டுகளில் முதல்முறையாக அவ்வாறு செய்துள்ளன.

இதற்கு முன்னர் செனட் சபையும் மக்களவையும் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அவை இரண்டும் ஜனநாயகக் கட்சிக்குக் கைமாறிவிடும்.

அதனால் சட்டங்களை மேலும் எளிதில் நிறைவேற்றமுடியும்.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் அதற்கு அதிக அதிகாரம் கிடைக்கும்.

விலைவாசி உயர்வும் ஈரான் போரும் வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இடைத்தவணைத் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளத்  தயாராய் இருப்பதாகத் திரு டிரம்ப் முன்னர் The New York Times ஊடகத்திடம் கூறியிருந்தார்.

இதற்கிடையே ஜனநாயகக் கட்சி சிறப்பாகச் செயல்பட்டதாகத் திரு டிரம்ப் Fox News ஊடகத்திடம் பாராட்டுத் தெரிவித்தார்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்